உள்ளூர் செய்திகள்
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து
- கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது
- மனைவி மற்றும் மகன், மகள் அதிஷ்டவசமாக ஏதும் பாதிப்பு இல்லாமல் உயிர் தப்பினர்
டி.என்.பாளையம்,
பங்களாப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (39) என்பவர் தனது மனைவி சத்யா மற்றும் மகன், மகளுடன் சொந்த வேலை காரணமாக காரில் கோபி சென்று விட்டு பின்னர் கோபியில் இருந்து பங்களாப்புதூர் சாலையில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். காரை ராஜா ஓட்டி வந்துள்ளார்.
அப்போது தனியார் மண்டபம் அருகே ஒரு வலைவில் திரும்பிய போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜாவுக்கு மட்டும் ரத்த காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
உடன் சென்ற மனைவி மற்றும் மகன், மகள் அதிஷ்டவசமாக ஏதும் பாதிப்பு இல்லாமல் உயிர் தப்பினர். பள்ளத்தில் விழுந்து காரின் முன்பக்க கண்ணாடி நொறுங்கி சேதமானது.
இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.