உள்ளூர் செய்திகள்

துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லாநேரில் விசாரணை நடத்தினார்.

பண்ருட்டி அருகே வாடகை சைக்கிள் நிறுத்தத்தில் புகுந்து 3 பேரை தாக்கிய மர்ம கும்பல்

Published On 2022-08-03 12:56 IST   |   Update On 2022-08-03 12:56:00 IST
  • பண்ருட்டி அருகே வாடகை சைக்கிள் நிறுத்தத்தில் புகுந்து 3 பேரை மர்ம கும்பல் தாக்கினர்.
  • தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரகோட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (வயது 55). இவர் அதே பகுதியில் வாடகை சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார்.  நேற்று இரவு இந்த சைக்கிள் ஸ்டாண்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்த கிருஷ்ணராஜ் அவரது மனைவி காந்திமதி, அவரது மகன் ஹரிகரன் ஆகியோரை பயங்கரமாக தாக்கி அங்கிருந்த மோட்டார் பைக் திருடி சென்றனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பி ரண்டு சபியுல்லா, பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப்-இன்ஸ் பெக்டர் ரங்கநாதன்மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்வி ரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்குமா? என்பது குறித்து விசாரித்தனர். கணவன், மனைவி, மகனை தாக்கி மோட்டார் பைக் திருடி சென்ற மர்ம கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News