உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திண்டுக்கல் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

Published On 2023-08-02 15:27 IST   |   Update On 2023-08-02 15:27:00 IST
  • தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
  • செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தி.மு.க. பிரமுகர் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா.சாமிநாதன். இவர் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்தார் என புகார் எழுந்தது. மேலும் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை செந்தில் பாலாஜியிடம் கொடுத்து வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தற்போது சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் செந்தில்பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்களை திரட்டும் முயற்சியில் அமலாக்கத்துறையினர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள வீரா.சாமிநாதன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை திண்டுக்கல் மாவட்ட தி.மு.க.வினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News