உள்ளூர் செய்திகள்

ஆபத்தான நிலையில் உள்ள பெயர் பலகை.

ஆபத்தான நிலையில் உள்ள இரும்பு வழிகாட்டி பெயர் பலகை

Published On 2022-07-14 08:59 GMT   |   Update On 2022-07-14 08:59 GMT
  • கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.
  • அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீர்காழி:

சீர்காழி அடுத்தசட்டநா தபுரம் கைகாட்டி ரவு ண்டானா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் திசை, வழி காட்டும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பிலானது. இந்த தகவல் தெரிவிக்கும் பல கையானது கடந்த 4 நாட்களாக அதில் வைக்கப்பட்டிருந்த வெல்டிங் சேதமடைந்து கூடிய விரைவில் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வரும் பிரதான சாலையாகும்.

இது குறித்து பொதுமக்கள் பலமுறை சீர்காழி நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரி களிடம் தெரிவித்தும், அது எங்களுக்கு கட்டுப்பாட்டில் இல்லாத சாலை எனவும், நகாய் எனும் நிறுவன கட்டுப்பாட்டில் உள்ள சாலை எனவே அந்த துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவியுங்கள். அவர்கள்தான் இதனை சரிசெய்ய இயலும் எனவும் கூறி இதுவரை அதனை சரி செய்யவும் இல்லை அப்புறப்படுத்தவும் இல்லை.

இதனால் அப்பகுதியை வாகனங்களும் பொதும க்களும் கடக்கும்போது உயிர்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இதனை சீரமைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News