உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

Published On 2022-10-29 09:02 GMT   |   Update On 2022-10-29 09:02 GMT
  • வேலைவாய்ப்பு கருத்தரங்கம் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நடைபெற்றது.
  • மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்,

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியும் நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு கருத்தரங்கம் சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார்.

வேலைவாய்ப்பு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கணபதி வரவேற்றார். கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தனது தலைமையுரையில் மாணவ- மாணவிகள் தாங்கள் படிக்கும் காலத்திலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பயிற்சி இல்லாத முயற்சி எதிர்பார்த்த வெற்றியை தராது என்றும் கூறினார்.

கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள தேவையான வழிமுறைகளையும், படிக்க வேண்டிய புத்தகங்களையும் தெரிவித்தார். மேலும் போட்டி தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் தன்மையையும் உதாரணத்துடன் விளக்கினார்.

பின்னர் மாவட்ட வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் சையது முகமது, அரசு நிறுவனங்களில் உள்ள பணி வாய்ப்பினை பற்றியும், அந்த நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் விளக்கிப் பேசினார். பின்னர் மாணவ- மாணவிகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கருத்தரங்கில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

முடிவில் தமிழ் துறை உதவி பேராசிரியை மேனகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News