உள்ளூர் செய்திகள்

நடைபயணம் மேற்கொண்டுள்ள விக்ரமை படத்தில் காணலாம்.

பெண் கல்வி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி, கன்னியாகுமாரி வரை விழிப்புணர்வு நடைபயணம்

Published On 2022-09-27 15:49 IST   |   Update On 2022-09-27 15:49:00 IST
  • கடந்த மார்ச் 7-ந் தேதி நடை பயணத்தை தொடங்கினார்.
  • பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசியதாகவும், விக்ரம் கூறினார்.

ஓசூர்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரம் (23), பி.ஏ. பட்டதாரியான இவர், பெண் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேசியக்கொடி ஏந்தியவாறு ஜம்மு முதல் கன்னியாகுமாரி வரை 4,000 கி.மீ தூரத்தை பயணிக்க கடந்த மார்ச் 7-ந் தேதி நடை பயணத்தை தொடங்கினார்.

பல்வேறு மாநிலங்களின் வழியாக பயணித்து நேற்று ஓசூர் வழியாக தமிழகம் வந்தடைந்தார். மேலும், இந்த பயணத்தை கன்னியாகுமாரியில் நிறைவு செய்ய இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களில் சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் தனக்கு உற்சாகமூட்டியதாகவும் அவர்கள் மத்தியில் பெண் கல்வி மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விளக்கி பேசியதாகவும், விக்ரம் கூறினார்.

Tags:    

Similar News