உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தற்கொலை

Published On 2023-11-28 10:30 GMT   |   Update On 2023-11-28 10:30 GMT
  • கிருஷ்ணகிரியில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
  • போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் துடுகனஅள்ளி பக்கமுள்ள திம்மராயனள்ளியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 65). இவர் கே.ஆர்.பி. அணை போலீஸ் நிலைய எல்லையில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 2023-ம் அண்டு ஜனவரி மாதம் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதி க்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் குணமடையாததால் திம்மநாயனஅள்ளியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் இருந்த மரத்தில் கடந்த 25-ந் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மகன் காவேரி கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. அணை போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News