உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சுக்கு ஆரத்தி எடுத்து வரவறே்ற ஊர் பொதுமக்கள்.

மாலைமலர் செய்தி எதிரொலியாக சட்டையாம்பட்டிக்கு மீண்டும் பேருந்து இயக்கம்

Published On 2022-12-30 15:19 IST   |   Update On 2022-12-30 15:19:00 IST
  • மாலை மலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
  • பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள் மாலை மலருக்கு நன்றி தெரிவித்தனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மத்தியம்பட்டி கிராம பஞ்சாயத்திற்குட்பட்டது சட்டையாம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளின் கல்வி நலன் கருதி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் பக்கத்து மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் தங்களுடைய குழந்தைகளின் எதிர்கால கல்வி நலன் கருதி கூலி வேலைக்காக புலம்பெயர்ந்து அங்கே தங்கி வேலை செய்து தங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக பிழைப்ப நடத்தி வரும் நிலை உள்ளது.

சட்டையாம்பட்டி கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்திற்கு அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

குறிப்பாக சட்டையாம்பட்டி கிராமத்திற்கு இயக்கப்பட்ட 4A-என்ற அரசு பேருந்து கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இயக்கப்படவில்லை. இதனால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைதூரம் நடந்து சென்று கல்வியை கற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது,

தனியார் பேருந்தில் சுமார் 17 கி.மீட்டர் தூரம் ஊத்தங்கரை வரை பயணம் செய்து, அங்கிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் நடந்து பள்ளியை சென்றடைகின்றனர், குறிப்பாக 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், அனுமன்தீர்த்தம் பகுதிக்கு நாள் தோறும் சுமார் 8 கிலோ மீட்டர்க்கு மேல் நடந்து செல்லும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு வருவதற்கு இரவு எட்டு மணிக்கு மேல் நேரமாகிறது.

இரவு நேரத்தில் நடந்து செல்லும் சாலையில் விளக்குகள் கூட இல்லாமல் இருளில் நடந்து செல்லும் ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று மாலை மலர் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து ஊத்தங்கரையில் இருந்து சட்டையாம்பட்டிக்கு மீண்டும் நகர பேருந்து இயக்கப்பட்டு உள்ளது. அந்த பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள் மாலை மலருக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News