உள்ளூர் செய்திகள்

ஓசூர் அருகே வாகன சோதனையில் போலி ஆவணங்களுடன் இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல்

Published On 2022-09-12 15:00 IST   |   Update On 2022-09-12 15:00:00 IST
  • போக்குவரத்து ஆர்.டி.ஓ. துரைசாமி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.
  • ஆம்னி பஸ் உரிமையாளர் சிராஜ் எம்.நாயர் , டிரைவர்கள் லாலுமோஹனன், சஞ்சீவ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் சிப்காட் பகுதியில் போக்குவரத்து ஆர்.டி.ஓ. துரைசாமி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக கேரளா மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ் ஒன்று வந்தது.

அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டபோது உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழகத்துக்கு இயக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் இங்கு அனுமதி வாங்கியது போல போலியான ஒரு ஆவணத்தையும் வைத்திருந்துள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசில் துரைசாமி புகார் செய்தார் . அதன்பேரில் ஆம்னி பஸ் உரிமையாளர் சிராஜ் எம்.நாயர் , டிரைவர்கள் லாலுமோஹனன், சஞ்சீவ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News