உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகரில் பெய்த மழையை படத்தில் காணலாம்.

தருமபுரியில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2023-03-20 09:56 GMT   |   Update On 2023-03-20 09:56 GMT
  • அதியமான் கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மாலை கனமழை பெய்தது.
  • மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.

தருமபுரி,

தமிழகத்தில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலிலே வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.

தொடர்ந்து மாவட்டத்தில் தருமபுரி நகர் பகுதி, அன்னசாகரம், நெசவாளர் காலனி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மாலை கனமழை பெய்தது.

மேலும் கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News