உள்ளூர் செய்திகள்

குண்டும்,குழியுமாக உள்ள தார்சாலை.

போதிய சாலை வசதியில்லாததால் பள்ளி மாணவிகள் அவதி

Published On 2023-09-06 15:41 IST   |   Update On 2023-09-06 15:45:00 IST
  • இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர்.
  • மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், , சூளகிரி ஒன்றியத்திற்கு உள்பட்ட மாரண்டப்பள்ளி , கருங்கள், மைதாண்ட பள்ளி, சுழல் தின்னை மற்றும் கூட்டூர் ஆகிய கிராமங்களில் சுமார் 1500 -க்கும் மேற்பட்ட குடியி ருப்பபுகள் உள்ளன.

இங்கு 3000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் விவசாய பொருட்களை விற்பனை செய்யவும், வெளியூர்களுக்கு சென்று தொழிற்சாலையில் பணிபுரிவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என 1500-க்கும் மேற்பட்டவர்கள் தினமும் சூளகிரி, ஒசூர், பெங்களுர், என பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் போதிய பேருந்து வசதியில்லாததால் கிராமங்களில் உள்ள டெம்போ , ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மூலம் சூளகிரி பேருந்து நிலையம் வந்து பல பகுகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ மாணவிகள் சூளகிரியில் இருந்து மைதாண்டப்பள்ளி வரை 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்து வருகின்றனர்.இதனால் மாணவிகள் அச்சத்துடன் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாரண்ட பள்ளி முதல் மைதாண்டப்பள்ளி வரையிலான தார்சாலை மிக மோசமான நிலையில் குண்டும்,குழியுமாக உள்ளதால் அதனை சீர்படுத்தி, சூளகிரி பேருந்து நிலையத்தில் இருந்து மைதாண்டப்பள்ளி வரையிலான பகுதிக்கு பேருந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.   

Tags:    

Similar News