உள்ளூர் செய்திகள்

தொடர் நீர் வரத்து குறைவால் பாறைகளாக காட்சியளிக்கும் ஒகேனக்கல் காவிரி ஆறு

Published On 2023-04-19 10:08 GMT   |   Update On 2023-04-19 10:08 GMT
  • மழை நீரும் கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் பிடிப்பு பகுதியில் இருந்தும் பெருக்கெடுத்து ஓடின.
  • தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததால் காவேரி ஆறு முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

ஒகேனக்கல்,

தருமபுரி மாவட்டம் , ஒகேனக்கல் காவேரி ஆறு வற்றாத ஜீவநதி ஆகவும் டெல்டா பாசன விவசாயிகளின் துயர் துடைக்கும் காவிரி ஆக குடகு மலையிலிருந்து தஞ்சை வரை நெற்களஞ்சியங்களின் ஜீவனாக விளங்கி வருகிறது.

இந்த ஆண்டு காவிரி ஆற்றில் சுமார் 140 நாட்களுக்கும் மேலாக ஒரு லட்சம் கன அடி தண்ணீர் அதிக அளவிலான உபரிநீரும், மழை நீரும் கர்நாடக அணைகளில் இருந்தும் நீர் பிடிப்பு பகுதியில் இருந்தும் பெருக்கெடுத்து ஓடின.

வரலாறு காணாத தொடர் வெள்ளப்பெருக்கு காவிரி ஆற்றில் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த நிலை மாறி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி மட்டுமே தண்ணீர் வரத்து இன்று காலை முதல் காணப்படுகிறது.

இதன் காரணமாக ஆலம்பாடி ஒகேனக்கல் ஊட்டமலை உள்ளிட்ட பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து குட்டை போல் தேங்கி உள்ளது. தண்ணீர் வரத்து அதிகம் இல்லாததால் காவேரி ஆறு முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் பாறைகளாகவே காட்சியளிக்கிறது.

தொடர் நீர்வரத்து காலங்களில் காவிரி ஆற்றில் பாறைகள் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு தண்ணீர் மூழ்கடித்து சென்ற பகுதியில் அனைத்தும் தற்பொழுது வறண்டு பாறைகள் மட்டுமே தெரியும் நிலை மாறி உள்ளது. 

Tags:    

Similar News