உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கேரளாவில் வெளுத்து வாங்கும் மழை பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2022-07-11 13:00 IST   |   Update On 2022-07-11 13:00:00 IST
  • கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
  • இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கூடலூர்:

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.

குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 128.40 அடியாக உள்ளது. நேற்று 1509 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2122 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து 1611 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4352 மி.கன அடியாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவ தாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் நேற்று 54.59 அடியாக இருந்தது.

இன்று காலை 55.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1612 கன அடி மதுரை குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு என மொத்தம் 969 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 2770 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக வும், சோத்து ப்பாறை அணை நீர் மட்டம் 76.26 அடியாகவும் உள்ளது.

பெரியாறு 43, தேக்கடி 28, கூடலூர் 4.7, உத்தமபாளையம் 4.8, வீரபாண்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News