உள்ளூர் செய்திகள்

விபத்தில் இறந்த மனோஜ்.

சூளகிரி அருகே விபத்தில் டிரைவர் பலி

Published On 2022-06-09 16:38 IST   |   Update On 2022-06-09 16:38:00 IST
  • மோட்டார் சைக்கிள்கள் மோதல்.
  • விபத்தில் சிக்கிய டிரைவர் பலியானார்.

சூளகிரி

 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக் கோட்டை அருகே பஜ்ஜேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் மனோஜ் (வயது22). இவர் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மோட்டார் சைக்கிளில் சூளகிரி அருகேயுள்ள கொல்லப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மனோஜ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மனோஜை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News