உள்ளூர் செய்திகள்
75 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம்
- சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படும்.
- இதில் விருப்பமுள்ள விவசாயிகள் கபிலர்மலை வேளாண்மை துறையை அணுகவும்.
பரமத்திவேலூர்:
கபிலர்மலை வேளாண்மை துறை அலுவலர்கள் வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார பகுதிகளை சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்து கொடுக்கப்படும் . இதில் விருப்பமுள்ள விவசாயிகள் கபிலர்மலை வேளாண்மை துறையை அணுகவும். சொட்டுநீர் பாசனம், மானியத்தில் அமைத்து தர தேவையான ஆவனங்கள் சிட்டா, அடங்கல், எப்எம்பி, ஆதார் கார்டு நகல்,ரேசன் கார்டு நகல்,போட்டோ சிறு, குறு விவசாயிக்கான கிராம நிர்வாக அலுவலர் சான்று ஆகியவைகள் ஆகும். இவற்றை கொண்டு வந்து வேளாண்மை துறை அலுவலகத்தில் சமர்பித்து பயின்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.