உள்ளூர் செய்திகள்

அரசூர் மலட்டாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்றது.

அரசூர் மலட்டாறிலிருந்து பாசன நீர் கிடைக்க தூர்வாரும் பணி

Published On 2023-10-25 08:48 GMT   |   Update On 2023-10-25 08:48 GMT
  • இதனால் விவசாய பாசனமும், ஏரி பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
  • இதனால் அனைத்து கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் மலட்டாறில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலட்டாறில் வரக்கூடிய தண்ணீர் இருவேல்பட்டு, காரப்பட்டு, மேல்தணியாலம்பட்டு, டி.குமாரமங்கலம், சேமங்கலம், ரெட்டிகுப்பம், ஒறையூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் வழி தூர்ந்துபோய் உள்ளது. மணல் மேடாக உள்ளதால் மழைக்காலத்தில் ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் செல்ல தடை ஏற்படும்.

இதனால் விவசாய பாசனமும், ஏரி பாசனம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனையறிந்த ஒன்றிய கவுன்சிலர் ஆடிட்டர் சுகந்தி ராஜீவ்காந்தி, ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் மேடுகளை அகற்றி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் வகையில் சரி செய்தார். இதனால் அனைத்து கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News