உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

வகுப்பறையில் மாணவர்களை பிறருடன் ஒப்பிட்டு பேசக் கூடாது-கருத்தரங்கில் பேச்சு

Published On 2023-11-10 11:01 IST   |   Update On 2023-11-10 11:01:00 IST
  • காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய கல்வி தினமாக கடைபிடிக்க ப்பட்டது.
  • மாணவர்களின் திறமை களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.

சின்னாளப்பட்டி :

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல்கலாம் ஆசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய கல்வி தினமாக கடைபிடிக்க ப்பட்டது. இதனை முன்னி ட்டு கல்வியியல் துறை தலைவர் ஜாகிதா பேகம் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து பேசுகையில் இந்தியாவில் சுதந்திரத்துக்கு முன் இருந்த கல்வி நிைலயையும், தற்போதைய கல்வி வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். கல்வி கற்பதால்தான் ஒரு நாடு வளர்ச்சியடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

பாண்டிச்சேரி பல்கலை க்கழக கல்வியியல் துறை முனைவர் விஜயகுமார் பேசுகையில், எந்த ஒரு மனிதனின் வெற்றிக்கு பின்பும் ஆசிரியரின் பங்கு கண்டிப்பாக இருக்கும். தன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே தலைமைத்துவ த்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள முடியும். மாணவர்களின் திறமை களை ஆசிரியர்கள் கண்டறிந்து அவற்றை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.

எந்த காரணம் கொண்டும் மாணவர்களை மற்றவர்க ளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது. மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விடா முயற்சி மற்றும் பொறுமை அவசியம். மேலும் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை கண்டு பிடித்து அதனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசுருதீன், பல்கலைக்கழக பேராசிரியர் வேலுமணி, உதவி பேராசிரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் தேவகி நன்றி கூறினார்.

Tags:    

Similar News