விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும்
- சமுதாய சீர்கேடுகளால் தி.மு.க.ஆட்சி முடிவிற்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.
- அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம்,அம்மா மினி கிளினிக் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டியில் அ.தி.மு.க., 52 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதற்கு சாணார்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அ.தி.மு.க. கொடியேற்றி வைத்து பேசியதாவது:-
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 52 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக பொதுக் கூட்டங்கள் மற்றும் புதிய கட்சி கொடிகள் ஏற்றும் விழா சிறப்பாக நடந்து வருகிறது.இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து கட்சியை அழித்து விட வேண்டும்,ஒழித்து விட வேண்டும் என தி.மு.க.வினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் தற்போது அவரது வாரிசுகளும் முயற்சித்து. முடியாமல் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அ.தி.மு.க.திகழ்கிறது.
தி.மு.க. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக பெரும்பாலான மகளிருக்கு ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்காததால் இந்தத் திட்டமே தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும்.இதுபோன்று செய்ய முடியாத வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை சீர்கேடு,தங்கு தடை இன்றி 24 மணி நேரமும் கிடைக்கும் சாராய சாம்ராஜ்யம்,அபின்,கஞ்சா ,லாட்டரி விற்பனை போன்ற விஷயங்களால் நாட்டையே போதை மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர்.
இது போன்ற சமுதாய சீர்கேடுகளால் தி.மு.க.ஆட்சி முடிவிற்கு நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆட்சி முடிவிற்கு கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், தாலிக்கு தங்கம்,அம்மா மினி கிளினிக் போன்ற எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்கள் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கல்விக்கடன் ரத்து செய்வதாக கூறியதால் மாணவர்களும்,பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறியதால் அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் தற்போது போராடி வருகின்றனர் என்றார்.
இதில் மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன்,வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி,பொதுக்குழு உறுப்பினர் மேட்டுக்கடை செல்வராஜ், மாவட்ட ஜெ.பேரவை இணைச் செயலாளர்கள் சுப்பிரமணி, ஜெயபாலன், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் ஹரிஹரன், ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ்பாபு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் அந்தோணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிறுகுடி தினேஷ், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொன் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் ஒத்தக்கடை,கணவாய்ப்பட்டி பங்களா, கொரசின்னம்பட்டி,அஞ்சுகுழிபட்டி,மேட்டுக்கடை,சாணார்பட்டி, நொச்சிஓடைப்பட்டி, விராலிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதிய கொடிக்கம்பங்களில் அ.தி.மு.க.கொடியை ஏற்றி வைத்து,இனிப்புகள் வழங்கப்பட்டது