உள்ளூர் செய்திகள்

நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசிய காட்சி.

சங்கரன்கோவிலில் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம்-ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு

Published On 2023-08-11 14:47 IST   |   Update On 2023-08-11 14:47:00 IST
  • தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு 20 சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • சார்பு அணிகள் கட்சி தலைமை அறிவித்துள்ள தீர்மானங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் மேலரதவீதியில் உள்ள கோகுலம் மண்டபத்தில் நடந்தது.

நிர்வாகிகளுக்கு ஆலோசனை

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றி விஜயன் வரவேற்றார்.

குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரை, வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் அன்புமணி கணேசன் ஆகியோர் சார்பு அணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. 20 சார்பு அணி நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:-

40 தொகுதியிலும் வெற்றி

தி.மு.க.வில் 23 சார்பு அணிகள் உள்ளன. தற்போது தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு 20 சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சார்பு அணி பதவி என்பது கட்சியின் வளர்ச்சிக்காக உழைப்பதற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ள பதவி ஆகும். சார்பு அணி நிர்வாகிகள் அந்தந்த பகுதி ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி செயல்பட வேண்டும்.

சார்பு அணி நிர்வாகிகள் மாதம் ஒருமுறை கூட்டம் நடத்தி அது குறித்து மாவட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். மேலும் சார்பு அணிகள் கட்சி தலைமை அறிவித்துள்ள தீர்மானங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கட்சித்தலைவர் அறிவித்துள்ளது போல 100 பேச்சாளர்களை உருவாக்க வேண்டும். அந்தந்த அணி களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணிகளை செய்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும்.

இல்லம் தேடி கல்வி

மேலும் தலைமைக் கழகம் மற்றும் மாவட்ட கழகம் அறிவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அனைத்து சார்பு பணி நிர்வாகிகளும் அந்தந்த பகுதியில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களுடன் ஆலோசித்து இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, தேவா என்ற தேவதாஸ், பராசக்தி, வேல்சாமி பாண்டியன், மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், பெரியதுரை, ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, பேரூர் கழகச் செயலாளர்கள் குருசாமி, ரூபி பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, நகராட்சி சேர்மன்கள் சங்கரன்கோவில் உமாமகேஸ்வரி சரவணன், புளியங்குடி விஜயா சவுந்தரபாண்டியன், வாசுதேவநல்லூர் லாவண்யா,

மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் இளைஞர் அணி முகேஷ், மகளிர் அணி சிவசங்கரி, ஆதிதிராவிடர் நலக்குழு அணி கே.எஸ்.எஸ். மாரியப்பன், அயலக அணி அமைப்பாளர் அமிதாப், விளையாட்டு மேம்பாட்டு அணி காசிராஜன், துணை அமைப்பாளர் கேபிள் கணேசன், நெசவாளர் அணி சந்திரன், இலக்கிய அணி குரு வசந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன், ராஜ், செய்யது இப்ராஹிம், உதயா, நகரத் துணை செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News