உள்ளூர் செய்திகள்

தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல்

Published On 2023-04-10 09:57 GMT   |   Update On 2023-04-10 09:57 GMT
  • தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
  • நகர தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், 5 ரோடு ரவுண்டானா அண்ணா சிலை, மாவட்ட பதிவாளர் அலுவவகம், ராசி வீதி ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவரு மான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, கோடை காலத்தில் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

நகர தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரி பழையபேட்டை ஆட்டோ ஸ்டேண்ட், 5 ரோடு ரவுண்டானா அண்ணா சிலை, மாவட்ட பதிவாளர் அலுவவகம், ராசி வீதி ஆகிய 4 இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பங்கேற்று, பொதுமக்கள், நீர்மோர், தர்பூசணி பழம், முலாம் பழம், பழசரசங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவடட பொருளாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், தி.மு.க. நிர்வாகிகள் அன்பரசன், வக்கீல் மதியழகன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News