உள்ளூர் செய்திகள்

வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் தொடர்பாக சங்கரன்கோவிலில் தி.மு.க. ஆலோசனை கூட்டம்-ராஜா எம்.எல்.ஏ., பங்கேற்பு

Published On 2023-08-07 14:10 IST   |   Update On 2023-08-07 14:10:00 IST
  • 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
  • கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ., பேசினார்.

சங்கரன்கோவில்:

தென்மண்டலத்துக்கு உட்பட்ட 19 மாவட்டங்களின் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கூட்டம் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரம் தேவிபட்டினம் சாலை பேராவூர் என்ற இடத்தில் நடைபெறுகிறது.

ஆலோசனை கூட்டம்

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் இந்த பயிற்சி பட்டறைக்கு கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. இதில் ராஜா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

2 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்களை மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் அழைத்து வர வேண்டும். இது தொடர்பாக 2 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒன்றிய, நகர, பேரூர் வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் பயிற்சி பாசறையில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்கங்கள், கலைஞரின் சாதனை விளக்க கூட்டங்கள், ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் கட்சி கொடி ஏற்றுதல், கட்சி மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பொன் முத்தையா பாண்டியன், பூசை பாண்டியன், ராமச்சந்திரன், மதி மாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றி விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், சங்கரன்கோவில் மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் செயலாளர்கள் ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News