உள்ளூர் செய்திகள்

மாவட்ட அரசு இசைப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், வயலின் பயிற்சிக்கு சிறப்பு சேர்க்கை

Published On 2022-09-27 16:02 IST   |   Update On 2022-09-27 16:02:00 IST
  • விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.
  • தலைமை ஆசிரியரை 04343 - 234001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) திரிவேணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியில், குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவாரம், பரத நாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகியவற்றிற்கு கடந்த ஜூன் மாதம் முதல் மூன்றாண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரும் விஜயதசமியை முன்னிட்டு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருவரும் 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அரசு பஸ்களில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயணச் சலுகை, வசதி அளிக்கப்படும். மேலும் மூன்றாண்டு பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் மற்றும் கோவில்களில் பணி, அரசுப் பள்ளிகள், மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 04343 - 234001 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News