உள்ளூர் செய்திகள்

அரூர் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய இளைஞரணி சார்பாக பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது.

அரூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

Published On 2023-07-16 15:25 IST   |   Update On 2023-07-16 15:25:00 IST
  • பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
  • கொங்குவேம்பு, வீ.அண்ணாநகர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 900 மாணவ, மாணவி களுக்கு நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி வழங்கப்பட்டது.

அரூர்,  

கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம், அரூர் விஜய் மக்கள் இயக்க ஒன்றிய இளைஞரணி சார்பாக பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவச நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவர் விஜய்நவின், பொருளாளர் சிலம்பரசன், இணைச் செயலாளர் கலையரசன், நகர செயலாளர் முரளி, ஒன்றிய தொண்டரணி துணை தலைவர் சிட்லிங் அசோக், இணைச்செயலாளர் மோட்டூர் சக்தி, கிளை நிர்வாகிகள் சக்திவேல், குமரேசன், கோவிந்தன், பாலாஜி, திருப்பதி, செல்வம், சத்தியராஜ், மூவேந்தன், இளங்கோ, விக்னேஷ், சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் அரூர் ஒன்றிய இளைஞரணி தலைமையில் கிராமங்களில் உள்ள கிளை சார்பாக சிட்டிங், பொருசு மரத்துவளவு, ரெட்டை குட்டை, தண்டா, பறையப்பட்டிபுதூர், ஈச்சம் பாடி, கொங்குவேம்பு, வீ.அண்ணாநகர் கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் 900 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா, பென்சில், அழிப்பான், பென்சில் திருவி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News