உள்ளூர் செய்திகள்

நடிகர் சரத்குமார் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், வழங்கிய காட்சி.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கல்

Published On 2023-07-16 15:47 IST   |   Update On 2023-07-16 15:47:00 IST
  • திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி, கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.
  • நிகழ்ச்சி முடிவில் பாலு நன்றி கூறினார்.

தருமபுரி, 

திருப்பத்தூர் நகர சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் பிறந்த நாளை முன்னிட்டு பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் லோகநாதன் தலைமை வகித்தார். நகர செயலாளர் சரவணன், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி, கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கினர்.

நிகழ்ச்சியில் பிரபு, பாலு, அஜ்மீர் அலி, சரவணன் சுரேஷ்குமார், வினோத்குமார், மகளிர் அணி செண்பகம், சங்கீதா, கற்பகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பாலு நன்றி கூறினார்.

Tags:    

Similar News