உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் விளைந்துள்ள மலைக்கொய்யா பழத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் விளைந்த மலைக்கொய்யா பழத்தில் நோய் தாக்குதல்

Published On 2022-12-06 11:35 IST   |   Update On 2022-12-06 11:35:00 IST
  • மழையின் காரணமாகவும், அவ்வப்போது ஏற்படும் பனியின் தாக்கத்தாலும் கொய்யா பழங்களில் புதுவித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது.
  • இந்த புதுவித நோய் தாக்கத்திலிருந்து கொய்யாப்பழ மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் மலை கிராமங்களில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள், மலர் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு பல்வேறு ஆங்கில காய்கறிகள் மட்டுமின்றி பழ வகைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.

கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் தற்போது அதிக அளவில் கொய்யா பழங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கொடைக்கானலில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், அவ்வப்போது ஏற்படும் பனியின் தாக்கத்தாலும் கொய்யா பழங்களில் புதுவித நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சல் பாதிப்பு அடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே தோட்டக்கலைத்துறையினர் இந்த புதுவித நோய் தாக்கத்திலிருந்து கொய்யாப்பழ மரங்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலியூர் கிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News