உள்ளூர் செய்திகள்

காணொலி மூலம் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளை படத்தில் காணலாம்.

திருச்செந்தூரில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

Published On 2022-11-13 08:07 GMT   |   Update On 2022-11-13 08:07 GMT
  • தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்
  • திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருச்செந்தூர்:

தமிழகம் முழுவதும் 234 சட்ட மன்ற தொகுதியில் உள்ள தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களிடம் (நிலை-2) நேற்று மாலை தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்செந்தூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில், மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், யூனியன் தலைவர்கள் பாலசிங்(உடன்குடி), ஜனகர்(ஆழ்வார்திருநகரி), மேலாத்தூர் பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ், இளங்கோ, நகர செயலாளர்கள் வாள் சுடலை, ராஜேஷ், முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News