உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

தருமபுரி பா.ம.க. சார்பில் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம்

Published On 2023-07-03 09:25 GMT   |   Update On 2023-07-03 09:25 GMT
  • பள்ளி, கல்லூரிகளின் அருகாமையில் உள்ள மதுபானக் கடைகளை அரசு அகற்ற வேண்டும்.
  • கல்விக்கூடங்களில் போதைப்பொருட்கள் நடமாட்ட த்தை கண்காணித்து, போதைப் பொருட்களை கட்டுப்ப டுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி மேற்கு மாவட்ட மாணவர் சங்க பொதுக்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தருமபுரி ஒட்டப்பட்டியில் அமைந்துள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் பா.ம.க. கவுரவத் தலைவரும், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி, பா.ம.க. மாவட்ட செயலாளரும், தருமபுரி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன், மாநில துணைத் தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சரியான விதிகளை பின்பற்றி சமூக நீதி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற தருமபுரி மாவட்ட மாணவர் சங்க பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நடப்பு கல்வி ஆண்டிலேயே வன்னியர்களுக்கு 10.5 உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

பள்ளி, கல்லூரிகளின் அருகாமையில் உள்ள மதுபானக் கடைகளை அரசு அகற்ற வேண்டும்.

தவறினால் பாட்டாளி மாணவர் சங்கம் சார்பாக விரைவில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதென தீர்மானிக்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரின் நீண்ட நாள் கனவான அருகாமை பள்ளி திட்டத்தினை மத்திய அரசு நடைமுறைப்படுத்த இப்பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

கல்விக்கூடங்களில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து, போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவில் மாணவர் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழரசு நன்றி கூறினார்.

Tags:    

Similar News