உள்ளூர் செய்திகள்

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை படத்தில் காணலாம்.

தருமபுரி பேருந்து நிலைய சாலையில் திடீர் பள்ளம்

Published On 2023-03-12 15:16 IST   |   Update On 2023-03-12 15:16:00 IST
  • குழி சாலையில் உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர்.
  • கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

 தருமபுரி,  

தருமபுரி நகரின் மையப் பகுதியான பேருந்து நிலையம் முன்பு உள்ள முகமதுஅலி கிளப் ரோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை கால்வாயின் மேற்புற வளைய தொட்டி பழுதாகி சாக்கடை தண்ணீர் சாலையில் வழிந்தோடியது.

இந்நிலையில் நகராட்சி ஊழியர்கள் வழிந்தோடும் சாக்கடை நீர் கால்வாயில் செல்லும் அளவுக்கு பணியை செய்து வளைய தொட்டியை மூடாமல் குழியை சுற்றி பாதுகாப்பு ஏற்படுத்தி சென்று விட்டனர். இந்த குழி சாலையில் உள்ளதால் வாகனங்களை இயக்குவதில் சிரமப்படுகின்றனர்.

இந்த குழியை ஒட்டியே வணிக நிறுவனங்கள் உள்ளதால் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.

இந்த குழி மூடப்படாமல் சாக்கடைநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் உள்ள வியHபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள சிறிய குழியைக் கூட மூடாமல் திறந்த நிலையில் இருப்பது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. தருமபுரி நகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே திறந்த நிலையில் உள்ள குழியை மூட மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News