உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர் அனிதா குமரன் ஆகியோர் பார்வையிட்டதை படத்தில் காணலாம்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.2 கோடி - 2 கிலோ தங்கமும் பக்தர்கள் வழங்கினர்

Published On 2022-09-13 08:54 GMT   |   Update On 2022-09-13 08:54 GMT
  • பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இருமுறை எண்ணப்படுவது வழக்கம்.
  • மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மாதந்தோறும் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதத்தில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை முதலாவதாக எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் (ெபாறுப்பு) அன்புமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கோவில் ஆய்வாளர்கள் செந்தில்நாயகி, சண்முகராஜா, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, கருப்பன் மற்றும் சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவார பணி குழுவினர், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் மொத்தம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 806-ஐ பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் தங்கம் 2 கிலோ 225 கிராமும், வெள்ளி 15¼ கிலோவும், வெளிநாட்டு பணம் 426-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Tags:    

Similar News