உள்ளூர் செய்திகள்
அம்பாள் நகரில், உடற்பயிற்சி மையத்தை பிரகாஷ் எம்.எல்.ஏ., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம்.
ஓசூர் 37-வது வார்டு பகுதியில் ரூ.67.70 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
- ஒசூர் 37-வது வார்டில் ரூ.67.70 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
- மேயர் எஸ். சத்யா கலந்து கொண்டார்.
ஓசூர் மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்பிஎம் காலனி, ஜவகர் நகர் ,அம்பாள் நகர், மிடுகரப்பள்ளி பகுதிகளில் ரூ.67.70 மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய், அங்கன்வாடி மையம், , ஆழ்துளை கிணறு, கல்விக் கட்டிடம் பணிகளுக்கு, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஜவகர் நகர், அம்பாள் நகரில் திறந்த வெளி உடற்பயிற்சி மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, 37-வது வார்டு கவுன்சிலர் சென்னீரப்பா, கவுன்சிலர் மாதேஸ்வரன் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பகுதி மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.