உள்ளூர் செய்திகள்

இரண்டு பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

இரண்டு பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்- கலெக்டர் வழங்கினார்

Published On 2022-11-29 09:38 GMT   |   Update On 2022-11-29 09:38 GMT
  • 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
  • 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணை வழங்கினார்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 547 மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர், தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த பாபநாசம் மற்றும் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 4 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு இறப்பு நிவாரண உதவி தொகைக்கான காசோ லைகளை வழங்கினார்.

தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கும்பகோணம் வட்டத்தை சேர்ந்த 1 பயனாளிக்கு முதியோர் உதவி தொகைக்கான ஆணையினையும், வருவாய் துறையின் சார்பில் தஞ்சாவூர் வட்டத்தை சேர்ந்த 2 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவைக்கான சான்றிதழ்களையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News