உள்ளூர் செய்திகள்

கடலூர் சிப்பாய் தெருவில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு செய்தார்.

கடலூர் சிப்பாய் தெருவில் கழிவுநீர் கால்வாய் உடனடியாக சீரமைக்க துணை மேயர் நடவடிக்கை

Published On 2023-04-20 07:35 GMT   |   Update On 2023-04-20 07:37 GMT
  • கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார்.
  • கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார்.

கடலூர்:

கடலூர் மாநகராட்சி பகுதியில் துணை மேயர் தாமரைச்செல்வன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடலூர் சிப்பாய் தெருவில் வடிகால் வாய்க்கால் உடைந்து சேதம் அடைந்து இருந்தது. இதன் கார ணமாக கால்வாயில் சரியான முறையில் கழிவுநீர் செல்லாமல் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்ததை கண்டறிந்தார். இதனை தொடர்ந்து கடலூர் மாந கராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கழிவுநீர் கால்வாய் உடனடி யாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் அப்பகுதியில் சாலையோரமாக வசித்து வரும் மக்கள் துணை மேயர் தாமரைச்செ ல்வனிடம், இலவச மின் இணைப்பு வழங்குவதற்கு கோரிக்கை வைத்தனர். இது தொட ர்பாக அதிகாரி களிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது வி.சி.க நகர செயலாளர் செந்தில், நிர்வாகிகள் சம்பத், பிரேம், துரை, ராஜ்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News