உள்ளூர் செய்திகள்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-29 09:11 GMT   |   Update On 2022-12-29 09:11 GMT
  • தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
  • அரசு துறைகளில் பயன்படுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

திருவாரூர்:

திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறு த்தி ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது.

புதிய ஓய்வூதிய திட்டத்தின ரத்து செய்து அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தி னை வழங்கிட வேண்டும். அகவிலைப்படி உயர்வு, நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்படைப்பு ஆகியவர்களை உடனே வழங்கிட வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள் ஊர்புற நூலகர்கள் உள்ளிட்ட பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரத்து செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். கரு வூலம் உள்ளிட்ட அரசு துறைகளில் பயன்ப டுத்தும் மென்பொருள் திட்டத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும்.

சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் வட்டாட்சி யர் அலுவலகம்முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.

நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தம்பிதுரை தலைமை வகித்தார்.

திருவாரூர் மின்வா ரிய அலுவலகம்முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு கிளைச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

திருவாரூர்க லெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்திற்கு வட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அரசு ஊழியர் சங்கத்தை சார்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News