திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்காட்டுப்பள்ளியில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
- சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்.
- கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூதலூர்:
பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வை கண்டித்து பூதலூர் ஒன்றிய திருக்காட்டுப்பள்ளி நகர அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ ரெத்தினசாமி தலைமை தாங்கினார்.
இதில் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நடுக்காவிரி ராஜா, திருக்காட்டுப்பள்ளி நகர தலைவர் கேசியர்ராஜாங்கம், பூதலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கலியமூர்த்தி, தலைமை பேச்சாளர் அன்பு முருகன், திருவையாறு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், நகர பேரவை செயலாளர் கோவி கார்த்திகேயன், நகர பொருளாளர் செல்வராஜ், பூதலூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் காமராஜ், நகர இளைஞர் பாசறை செயலாளர் பிரபு, ஒன்பத்துவேலி கிருஷ்ணமூர்த்தி, நகர மகளிரணி செயலாளர் நேவிஸ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி, முன்னாள் ஒன்றிய செயலாளர் அய்யாராசு, ஒன்றிய பொருளாளர் எழிலரசன், பூதலூர் ஒன்றிய துணை செயலாளர் மாரியய்யா மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு கூட்டுறவு சங்க முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.