உள்ளூர் செய்திகள்

கடைகள் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த பகுதிகள் இடித்து அகற்றப்பட்டது.

கடைகளின் ஆக்கிரமிப்பு பகுதிகள் இடித்து அகற்றம்

Published On 2022-11-16 15:46 IST   |   Update On 2022-11-16 15:46:00 IST
  • கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
  • கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் உள்ள டீக்கடை உள்பட 3 கடைகளின் முன்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த செட், மேற்கூரை உள்ளிட்டவற்றை அகற்றக்கோரி சில வாரங்க–ளுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் சம்பந்தபட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.ஆனால் முறையாக ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் இன்று மதியம் மாநகராட்சி நகரமைப்ப அலுவலர் ராஜசேகரன், இளநிலை பொறியாளர்கள் கண்ணதாசன், ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு பொக்லைன் எந்திரத்துடன் சென்றனர்.

பின்னர் அந்த கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து இந்த பணி நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News