குண்டும், குழியுமாக உள்ள தார்சாலையை சீரமைக்க கோரிக்கை
- 3 ஆண்டுகளாக பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
- இரவு நேரங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை முதல் வெங்கடதாம்பட்டி புதூர் வரை சுமார் 1½ கி.மீ தொலைவில் செல்லும் தார்சலையை கடந்த 3 ஆண்டுகளாக பழுதாகி ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையை வெங்கடதாம்பட்டி மற்றும் அதன் வழி உள்ள வெங்கடதாம்பட்டி புதூர், சோளக்கப்பட்டி, படபள்ளி, படப்பள்ளி புதூர், புதுக்காடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
சாலை வழியாக பஸ் வசதி குறைவாகவே இருப்பதால் அனைவருமே இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி தான் நகர்புறங்களுக்கு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் மருத்துவம்,கல்வி போன்ற வற்றிக்காகவும் ஊத்தங்கரை வரை செல்ல இந்த சாலையை பயன்படுத்த வேண்டிய அவல நிலை உள்ளது.
இந்த சாலை பழுதானதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தார்சாலையை சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.