உள்ளூர் செய்திகள்

பழுதடைந்த நிலையில் உள்ள போலீஸ் குடியிருப்பு கட்டிடங்களை படத்தில் காணலாம்.

நிலக்கோட்டையில் சிதிலமடைந்து காணப்படும் போலீஸ் குடியிருப்பு

Published On 2022-07-03 05:00 GMT   |   Update On 2022-07-03 05:00 GMT
  • போலீஸ் குடியிருப்பில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன.
  • சாலையில் போகும் பொதுமக்கள் மீது எந்த நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை புதுத்தெரு பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை போலீஸ் குடியிருப்பு அமைக்கப்பட்டது.

இங்கு போலீஸ் குடியிருப்பில் உள்ள கட்டிடங்கள் பெரும்பாலும் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளன. இந்த போலீஸ் குடியிருப்பில் தற்போது 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடி இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 5 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் பழுதடைந்து முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் பாம்பு, பல்லிகள் மற்றும் பல்வேறு விஷ வண்டுகள் புகுந்து வருகிறது.

மேலும் இந்த கட்டிடம் பழுதடைந்து இருப்பதால் இதன் அருகே செல்லும் சாலையில் போகும் பொதுமக்கள் மீது எந்த நேரமும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த போலீஸ் குடியிருப்பில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு நிலக்கோட்டையில் புதிய போலீஸ் குடியிருப்பு கட்டிடம் கட்ட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Tags:    

Similar News