உள்ளூர் செய்திகள்

அரியவகை ஆமைகளை கடத்திய 2 வாலிபர்களை படத்தில் காணலாம்.

கோட்டக்குப்பம் அருகே அரிய வகை ஆமைகளை கடத்திய கடலூர் வாலிபர்கள் கைது

Published On 2023-03-12 08:21 GMT   |   Update On 2023-03-12 08:21 GMT
  • கோட்டக்குப்பம் அருகே அரிய வகை ஆமைகளை கடத்திய கடலூர் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • பையில் விலை உயர்ந்த 46 அரிய வகை ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொது சந்தேகத்துக்கிடமான வகையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிப ர்களை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பையில் விலை உயர்ந்த 46 அரிய வகை ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து திண்டிவனம் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன சரக அலுவலர் அஸ்வினி, வனவர் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகளிடம் 2 வாலிபர்களையும் கோட்டகுப்பம் போலீசார் ஒப்படைத்தனர்.

அவர்களை திண்டிவனம் வனசாரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 29), கார்த்திக் (24) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 46 அரிய வகை ஆமைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்தில் 2 வாலிபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News