உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வால் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

கடலூரில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு: மல்லிகை பூ ரூ.1000-க்கு விற்பனை

Published On 2023-11-11 07:58 GMT   |   Update On 2023-11-11 07:58 GMT
  • தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது.
  • தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது

கடலூர்:

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளை மறுநாள் அமாவாசை மற்றும் சஷ்டி விரதம் தொடங்கு வதால் கடலூர் திருப்பா திரிப்புலியூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க் கெட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக பூக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விழாக்கா லங்கள் தொடர்ந்து வருவதால் பூக்களின் விலை கிடுகிடு வென உயர்ந் துள்ளது. அதன்படி அரும்பு மற்றும் மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ரோஜா பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வியா பாரிகள் மற்றும் பொது மக்கள் தங்களுக்கு தேவை யான பூக்களை மட்டும் வாங்கி சென்றதையும் காணமுடிந்தது. தற்போது மழை காலம் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து உள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News