உள்ளூர் செய்திகள்

பூத்துக்குலுங்கும் சிலுவை மலர்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானலில் பூத்து குலுங்கும் சிலுவை மலர்கள்

Published On 2022-12-21 10:43 IST   |   Update On 2022-12-21 10:43:00 IST
  • கொடைக்கானலில் மிக அரிதாக டிசம்பர் மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கும் சிலுவை மலர்கள் தற்போது அதிகளவில் மலைப்பகுதியில் பூத்து குலுங்குகின்றன.
  • சிலுவை மலர்கள் பூத்து குலுங்குவதால் கிறிஸ்துவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் மிக அரிதாக டிசம்பர் மாதங்களில் மட்டும் பூத்துக்குலுங்கும் சிலுவை மலர்கள் தற்போது அதிகளவில் மலைப்பகுதியில் பூத்து குலுங்குகின்றன, கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரும் இடமான பிரையண்ட் பூங்காவிலும் குடியிருப்பு பகுதிகளான எம்.எம்.தெரு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் பூத்து குலுங்குகின்றன.

மகரந்த தாழ்கள் சிலுவை வடிவில் உள்ளதால் இதனை சிலுவை மலர்கள் என்று அழைக்கின்றனர். மஞ்சள், இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் பூக்கக்கூடியது. எபிடென்ட்ரம் இபாகென்ஸ் என தாவரவியல் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

தாவரங்கள் நிழலில் வளரக்கூடியது. மேலும் குளிர் பிரதேசங்களில் மட்டும் வளரும் தன்மை கொண்டது. இந்த மலர்கள் கொலம்பியா, மற்றும் வடக்கு பிரேசில் உள்ளிட்ட முக்கிய நாடுகளில் வளரக்கூடியது, கொடைக்கானலுக்கு அதிகளவில் வெளிநாட்டினர் வருவதால் பண்டைய காலத்தில் இவ்வகை தாவரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நடப்பட்டது. இதில் இன்றளவும் ஒரு சில தாவரங்களே தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது.

மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகை காலமான டிசம்பர் மாதத்தில் மட்டும் குறிப்பாக இந்த சிலுவை மலர்கள் பூத்து குலுங்குவதால் கிறிஸ்துவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Tags:    

Similar News