உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை பயிற்சி

Published On 2022-12-26 07:54 GMT   |   Update On 2022-12-26 07:54 GMT
  • நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
  • 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா வழங்கல்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற்பயிரில் அதிக மகசூல் பெற ஆதிதிராவிட விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.

மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தார்.

வேளாண்மை கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் வரவேற்று பேசினார்.

முகாமில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுந்தரம், வேளாண் கல்லூரி பேராசிரியர் மோகன், வேளாண்மை கல்லூரி பூச்சிகள் துறை பேராசிரியர் கான்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

தொடர்ந்து ஒன்றிய குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜ் ஆகியோர் 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா, பாஸ்போர்ட், யூரியா, அசோஸ்பைரில்லம், ஜிங் சல்பேட் கொண்ட தொகுப்பினை வழங்கினர்.

இதில் வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண் அலுவலர்கள் தமிழரசன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் கல்லூரி பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

Tags:    

Similar News