உள்ளூர் செய்திகள்

மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

தேசிய அளவில் தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது மாநில மகளிர் ஆணைய தலைவர் பேட்டி

Published On 2022-06-16 09:27 GMT   |   Update On 2022-06-16 09:27 GMT
  • தேசிய அளவில் தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது என மாநில மகளிர் ஆணைய தலைவர் கூறினரார்.
  • கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெற்றது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமரி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்ததும் மகளிர் ஆணையத் தலைவர் குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய அளவில் தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பெண் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடைபெற்றது. அதைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தற்போது குழந்தைத் திருமணம் மிகவும் குறைந்துள்ளது. பள்ளிகளில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல் புகார் அதிகம் எழுந்தது.

இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் காரணமாக, பள்ளிகளில் பாலியல் சீண்டல் புகார் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வன்முறை போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொந்த மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வருகின்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News