உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்.

ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது

Published On 2023-01-28 10:05 GMT   |   Update On 2023-01-28 10:05 GMT
  • ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • லேப்டாப், 3 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்.

பட்டீஸ்வரம்:

தஞ்சை மாவட்டம் அய்ய ம்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு இடத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரன்ட் பூரணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து இதில் சம்பந்தபட்டவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யுமாறு அய்யம்பேட்டை போலீசா ருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடைப்படையில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கு மார் தலைமையில் போலீசார் அருண் மற்றும் கார்த்திக் ஆகியோர் அய்யம்பேட்டை கடைவீதியில் உள்ள காம்ப்ளக்ஸில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த முகமது ரஃபீக் (வயது48), அவரது மனைவி மும்தாஜ் பேகம் (44) ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் ஆன்லைன் லாட்டரி வியாபாரத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 3 செல்போன்கள், மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கைப்பற்றி தம்பதியினர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News