உள்ளூர் செய்திகள்

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ.27 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2022-12-21 15:23 IST   |   Update On 2022-12-21 15:23:00 IST
  • தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
  • மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.

நாமக்கல்:

நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில், 950 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. இதில் ஆர்.சி.எச் ரகம் ரூ.6,369 முதல் ரூ.8,539 வரையிலும், சுரபிரகம் ரூ.6,369 முதல் ரூ.8,539 வரையிலும், கொட்டு ரகம் ரூ.3,216 முதல் ரூ.5,895 வரையிலும் என மொத்தம் ரூ.27 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. இதனை வியாபாரிகள் தரம் பார்த்து கொள்முதல் செய்து எடுத்து சென்றனர்.

Tags:    

Similar News