உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அவிநாசி வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2023-01-13 10:12 IST   |   Update On 2023-01-13 10:14:00 IST
  • ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
  • விற்பனை தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவிநாசி :

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.59.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 2, 276 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் ஆா்.சி.எச்.ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 7,000 முதல் ரூ.8, 666 வரையிலும், மட்டரக (கொட்டு ரக)பருத்தி குவிண்டால் ரூ.2,000 முதல் ரூ.3,500 வரையிலும் ஏலம்போனது. ஒட்டுமொத்த விற்பனை தொகை ரூ.59.11லட்சம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News