உள்ளூர் செய்திகள்

ேகாமுகி அணையில் தேங்கி வைக்கப்பட்டுள்ள நீர்.

கல்வராயன்மலையில் தொடர்ந்து மழை ேகாமுகி அணை நீர் மட்டம் உயர்வு

Published On 2023-09-11 07:57 GMT   |   Update On 2023-09-11 07:57 GMT
  • ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது.
  • குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கள்ளக்குறிச்சி:

தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெப்பம் சலனம் காரணமாக பரவ லாக மழை பெய்து வருகிறது. அதேபோல் கடந்த 2,3 நாட்களாக கல்வராயன் மலையில் மாலை நேரங்க ளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கல்வராயன் மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரண மாக கல்படை ஆற்றின் வழியாக நேற்று முன்தினம் நிலவரப்படி 200 கன அடி நீரும் பிறகு படிப்படியாக குறைந்து தற்போது 150கன அடி வரை தண்ணீர் கல்படையாற்றின் வழியாக கோமுகி அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டும் ஏற்கனவே 25 அடியாக இருந்த நிலையில் தற்போது ஒரு வாரத்தில் 32 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கோமுகி அணை நீர்மட்டம் உயர்ந்து வரு வதால் கச்சிராயப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News