உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாடு-குதிரை வண்டிகள் எல்கை போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம்

Published On 2022-12-31 08:15 GMT   |   Update On 2022-12-31 08:15 GMT
  • ஜனவரி 17-ந் தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்த வேண்டும்.
  • 24 பேர் கொண்ட விழாக்குழு அமைக்கப்பட்டது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று 8 ஊராட்சிகள் சார்பில் மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கான எல்கை பந்தயம் நடைபெறுவது வழக்கம்.

பாரம்பரியமாக நடைபெற்று வந்த இந்த பந்தயம் கடந்த 3 ஆண்டுகளாக தடைப்பட்டிருந்த நிலையில் வருகிற ஜனவரி-17 காணும் பொங்கல் தினத்தன்று நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் திருக்கடையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ் முன்னிலை வகித்தார். டி.சிம்சன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜனவரி-17 ந்தேதி எல்கை பந்தயத்தை உறுதியாக நடத்துவது, பந்தயத்தை நிர்வாகிகள், விழா குழுவினர் மற்றும் திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கப்பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி, ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது, விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளை அழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக கூட்டத்தில் எல்கை பந்தயம் நடத்துவதற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்த விஜயகுமார் தலைமையில் 24 பேர் கொண்ட விழா குழு அமைக்கப்பட்டது.கூட்டத்தில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள், குதிரை, மாடு உரிமையாளர்கள், ஜாக்கிகள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News