காங்கிரஸ் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
- காவேரிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் காந்தி சிலை முன்பு நூதன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மெழுகுவர்த்தி ஏந்தி கோஷமிட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காந்தி பிறந்த நாளையொட்டி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மகாத்மா காந்தி, பேரறிஞர் அண்ணா, காமராஜர் ஆகியோரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து காவேரிப்பட்டணத்தில் உள்ள காந்தி நூற்றாண்டு மண்டபத்தை மீட்க கோரியும் வட்டார நகர இந்திய தேசிய காங்கிரஸ் அலுவ–லகத்தின் அவல நிலையை தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் தவமணி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட செயலாளர் கோவிந்தன், காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மீனவர் அணி செயலாளர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் ராதா, முன்னாள் நகர தலைவர் வின்சன்ட் உள்ளிட்ட ஏராள–மான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.