உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய காட்சி.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி:கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Published On 2023-05-14 09:42 GMT   |   Update On 2023-05-14 09:42 GMT
  • ஏராளமானோர் வாழ்த்து கோஷங்களை எழுப்பி, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
  • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 கிருஷ்ணகிரி,

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த வெற்றியை கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர். அதன்படி, கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, பழையபேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் லலித்ஆண்டனி முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் ஹரி ஆகியோர் பங்கேற்று, இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், எஸ்சி, எஸ்டி துறை மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி, முன்னாள் நகரத் தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ்அர்னால்டு உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து கோஷங்களை எழுப்பி, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

இதே போல் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் நடந்த கொண்டாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்புரையாற்றினார்.

ஓ.பி.சி மாவட்ட தலைவர் ஆஜித்பாஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துறை தலைவர் ஷபீக்அகமத், குட்டி(எ)விஜயராஜ், இர்பான், மனித உரிமைத்துறை மாவட்ட தவைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக மரிநல பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News