உள்ளூர் செய்திகள்

ராகுலிடம் விசாரணைக்கு எதிர்ப்பு- கோவையில் காங்கிரசார் முற்றுகை-300 பேர் கைது

Published On 2022-06-17 10:13 GMT   |   Update On 2022-06-17 10:13 GMT
  • பா.ஜ.க அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை:

ராகுல்காந்தியை அராஜக முறையில் விசாரணை செய்து வரும் பா.ஜ.க அரசை கண்டித்து கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வி .எம். சி. மனோகரன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் எம் என் கந்தசாமி, அழகு ஜெயபால், மாநில பொதுச் செயலாளர்கள் சரவணகுமார், மகேஷ்குமார், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நவீன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராம்கி என்ற ராமகிருஷ்ணன், முன்னாள் மேயர்காலணி வெங்கடாசலம், கவுன்சிலர் காயத்ரி, ராயல் மணி, வளர்மதி கணேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்என்எல் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர் அதில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News